3 தொகுதிகளில் வாக்காளர் அட்டை பெற்ற அதிகாரி..! - அரசுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Update: 2022-09-30 03:08 GMT

3 தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ள நெட்டப்பாக்கம் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமாரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீதர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முகவரியை பெற்று சலுகைகளை பெற்று வருவதாக கூறியுள்ளார். புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்த அவரது மகன், தமிழக அரசு வேலையை பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், அக்டோபர் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு புதுச்சேரி அரசு, தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்