இணையத்தில் ஆபாச புகைப்படங்கள்... மன உளைச்சலில் காதலி தற்கொலை - காதலனை தேடிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2023-05-05 11:58 GMT

கேரள மாநிலம் கோட்டயம் அருகே ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் இளம் பெண் ஆதிரா. இவரும் கொத்தாநல்லூரை சேர்ந்த அருண் வித்யாதரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில், ஆதிராவிற்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனர். அப்போது, அருண் வித்யாதரனுடன் ஆதிரா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த மன உளைச்சலில் ஆதிரா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 4 தனிப்படைகள் அமைத்து காதலன் அருண் வித்யாதரனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், காசர்கோடு வடக்கு கோட்டச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் அருண் வித்யாதரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று இளைஞர் மது போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்