பிரிட்டன் மட்டுமல்ல...14 நாடுகளை கட்டி ஆண்ட பட்டத்து ராணி...

Update: 2022-09-09 16:54 GMT

பிரிட்டன் மட்டுமல்ல...14 நாடுகளை கட்டி ஆண்ட பட்டத்து ராணி...

ராணி எலிசபத்தின் 70 ஆண்டு கால ஆட்சி பிரிட்டனின் அரசியாக நீண்ட காலம் இருந்தவர்

14 உலக நாடுகளுக்கும் அரசியாக இருந்தவர் 56 காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு

பிரிட்டனின் அரசியாக 70 ஆண்டுகள் பதவி வகித்த ராணி எலிசபத், 14 உலக நாடுகளுக்கும் அரசியாக இருந்தார்.

பிரிட்டனின் ஆட்சியில் இருந்த நாடுகள் அனைத்தும் சுதந்திரம் பெற்ற பின், ராணி எலிசபத் தலைமையிலான காமன்வெல்த் கூட்டமைப்பில் இணைந்தன.

56 காமன்வெல்த் நாடுகளில், பிரிட்டன் உள்ளிட்ட 15 நாடுகளுக்கு ராணி எலிசபத் அரசியாக இருந்தார்.

இந்தியா உள்ளிட்ட மீதம் உள்ள 41 நாடுகள் குடியரசுகளாக மாறின. அங்கு குடியரசுத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.

ராணி எலிசபத், கனடா, ஆஸ்த்ரேலியா, நியுசிலாந்து, பாபுவா நியு கினி, சாலமன் தீவுகள், துவலூ, பெலிஸி, ஜமைக்கா, பஹாமாஸ், செயிண்ட் கிட்ஸ், ஆன்டிகுவா, செயின்ட் லுசியா, கிரெனடா, செயின்ட் வின்சென்ட் ஆகிய நாடுகளின் ராணியாக பதவி வகித்தார்.

இந்நாடுகளில் குடியரசுத் தலைவருக்கு பதிலாக, அவரின் பணிகளை ராணி எலிசபத் மேற்கொண்டார்.

ஆஸ்த்ரேலியா, நியுசிலாந்து, துவலூ ஆகிய நாடுகளின் தேசிய கொடிகளின் ஒரு மூலையில், பிரிட்டனின் தேசிய கொடியான யுனியன் ஜேக் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்