"தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என அச்சம்.. சொந்த ஊர் செல்லும் வட மாநிலத்தவர்கள்" - கொதிக்கும் சைமா கூட்டமைப்பு
- தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரை நோக்கி செல்வதால், தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதாக தென்னிந்திய நூற்பாலை சங்கத்தினர்(சைமா)வருத்தம் தெரிவித்துள்ளனர்.
- வட மாநில தொழிலாளர்களை துன்புறுத்துவதாகவும்,தாக்கப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில்வைரலாக பரவி வருகிறது. இதனால் தங்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரை நோக்கி செல்கின்றனர்.
- இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தினர், சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.
- இதனால் தொழிற்சாலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.