தமிழக சுற்றுலா பயணிகள் பேருந்தை துரத்தி வட மாநில கும்பல் செய்த காரியம் - ஓடும் பேருந்தில்.. த்ரில் காட்சிகள்
கோவையில் இருந்து வடமாநிலத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்தின் பின்பக்கம் வழியாக ஏறி, மேலே இருந்த பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் புதூர் மற்றும் சந்திராபுரம் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் வட மாநிலங்களில் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த 7ம் தேதி ஒடிசாவில் இருந்து குஜராத்திற்கு சென்ற நிலையில், பேருந்தின் மேலே இருந்த சில உடமைகள் காணாமல் போயுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து பேருந்தின் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதிகாலை 2 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது, பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஓடும் பேருந்தில் தாவி ஏறி பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உடைமைகளை கீழே வீசுவது பதிவாகி இருந்தது. அத்துடன் ஓடும் பேருந்தில் இருந்து இரு சக்கர வாகனத்திற்கு மாறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..