"கோவைக்கு புதிதாக எந்த திட்டமும் வரவில்லை" - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

Update: 2023-05-10 02:22 GMT

திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, மாவட்டத்தின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எஸ்.பி.வேலுமணி, திமுக ஆட்சியில், கோவை மாவட்டத்துக்கு புதிய திட்டம் எதுவும் கொண்டுவரப்படவில்லை என்றும், கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களும் வேகமாக முடிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்