"சாப்பாடு வேண்டாம்.. வேல தாங்க போதும்" - மனைவியை சுமந்துவந்து கேட்ட கணவன்
விழுப்புரத்தில், மாற்றுத்திறனாளி மனைவியை சுமந்து கொண்டு ஆட்சியர் அலுவலகம் சென்ற கூலித் தொழிலாளி அரசு வேலை கேட்டு மனு அளித்தார். கண்டாச்சிபுரத்தை அடுத்த ஆ.கூடலூரை சேர்ந்த முனியன், அளித்த மனுவில், மாற்றுத்திறனாளியான தனது மனைவி ஜோதி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளதாக கூறியுள்ளார். ஏழ்மையான குடும்பம் என்பதால், கருணை அடிப்படையில் அரசு வேலை மற்றும் வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் மோகன், மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.