நியூசிலாந்தில் "இனி புகைப்பிடிக்கக் கூடாது"... மீறினால் வாழ்நாள் தடை சட்டம்
நியூசிலாந்தில் 2009ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் சிகரெட் பிடிக்க வாழ்நாள் தடை சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்குள் புகைப்பிடிப்போர் இல்லாத நாடாக நியூசிலாந்தை மாற்றும் முனைப்புடன் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது... அந்த வகையில், 2009ம் ஆண்டு ஜனவரி 1க்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலை விற்கக் கூடாது என்று புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலம் சிகரெட் விற்பனையாளர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 6 ஆயிரத்தில் இருந்து 600 ஆகவும், சிகரெட்டுகளில் உள்ள நிகோடின் அளவும் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது... தடையை மீறி புகையிலை விநியோகம் செய்பவர்களுக்கு 79 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.