ரேஷன் கடைகளில் இனி…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

Update: 2022-08-11 02:06 GMT

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு நல்ல அரிசி வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகக் கூறினார்.

பகுதி நேர கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடைய நிதி மற்றும் ஏனைய நிதிகளை பயன்படுத்தப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

நியாய விலை கடைகளில் அனைத்து பொருட்களும் 30 நாட்களுக்குள் கிடைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு துறையில் பல புதிய மாற்றங்கள் வர உள்ளதாகவும், வருகிற ஜனவரி மாதத்தில் முதல்வருடன் கலந்து ஆலோசனை செய்து குளறுபடிகளை தீர்க்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்