தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு- இன்று முதல் அமல்

Update: 2022-09-10 15:21 GMT

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு- இன்று முதல் அமல்

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 100 யூனிட் வரையிலான மின்சாரம் தொடா்ந்து விலையில்லாமல் வழங்கப்படும் என்றும்,

குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றுக்கான மின்சார மானியம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு 27 ரூபாய் 50 காசுகள் கூடுதல் கட்டணம் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

300 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு மாதத்துக்கு 72 ரூபாய் 50 காசுகள் உயர்த்தவும்

400 யூனிட்கள் வரை மாதத்துக்கு 147 ரூபாய் 50 காசுகள் உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மாதத்துக்கு 297 ரூபாய் 50 காசுகள் என பல்வேறு மின் பயனீட்டு அளவுக்கு ஏற்ப கட்டண உயர்வு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

--

Tags:    

மேலும் செய்திகள்