பிறந்த பச்சிளம் குழந்தை விற்க முயற்சி...மதுரை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி - கையும் களவுமாக சிக்கிய பாட்டி

Update: 2023-03-28 14:37 GMT
  • மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • மருத்துவமனை அருகே மூதாட்டி ஒருவர், கையில் பச்சிளம் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.
  • இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் விசாரித்தனர். அப்போது, தனது மகள் அழகு பாண்டி அம்மாளின் குழந்தை என கூறியுள்ளார்.
  • அவரது மகளிடம் விசாரித்தபோது பொய் என்பது தெரியவந்தது.
  • குழந்தை யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், பச்சிளம் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற பாண்டியம்மாள், மாலதி உள்ளிட்ட 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்