"இந்தியா - நேபாளம் இடையிலான நட்பு வலுப்பெறும்" - டிவிட்டர் மூலம் பிரதமர் மோடி வாழ்த்து

Update: 2022-12-26 05:11 GMT

நேபாளத்தில் கடந்த மாதம் 20ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 275 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தேர்தலில் பெரும்பான்மையான 138 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. இதனையடுத்து முன்னாள் பிரதமரும், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான பிரசன்னா பல சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 163 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க உள்ளார். இந்நிலையில் பிரசந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா-நேபாளம் இடையிலான நட்புறவு மேலும் வலுப்படும் என எதிர்ப்பார்ப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்