மேக்கப் போடாமல் அழகி போட்டியில் அசத்தல்.!!"இயற்கை அழகுதான் மிகப்பெரிய அழகு" காண்போரை கவரவைத்து அழகி
மேக்கப் போடாமல் அழகி போட்டியில் அசத்தல்.!!"இயற்கை அழகுதான் மிகப்பெரிய அழகு" காண்போரை கவரவைத்து அழகி
மிஸ் இங்கிலாந்து அழகி போட்டியில் பங்கேற்ற ஒரு அழகி ஒப்பனையின்றி பங்கேற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். அழகிப் போட்டி என்றாலே மேக்கப் போட்டுக் கொண்டு அழகிகள் உலா வருவது தான் நம் கற்பனைக்குத் தோன்றும்... "ஏன் பெண்கள் மேக்கப் போடாமல் அழகாக இருக்க முடியாதா...? இயற்கை அழகுதான் மிகப்பெரிய அழகு" என்று கூறி மெலிசா ராஃப் என்ற அரசியல் படிக்கும் அழகி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்... அழகு சாதன பொருட்கள் கேடுதான் விளைவிக்கும் என்பது அவரது கருத்து... இங்கிலாந்து அழகிப் போட்டியின் 94 வருட வரலாற்றில் ஒரு பெண் மேக்கப் இல்லாமல் பங்கேற்றது இதுவே முதன்முறை...