பஸ் ஸ்டாண்டில் காதலி பேசாத ஆத்திரத்தில் பஸ் கண்ணாடியை உடைத்த காதலன் - சொட்டிய ரத்தம்.. பதறிய மக்கள்
- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், காதலி பேசாத ஆத்திரத்தில், அரசுப் பேருந்து கண்ணாடியை கையால் உடைத்த மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
- நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நின்றிருந்த இளைஞர் ஒருவர், திடீரென, அரசுப் பேருந்தின் கண்ணாடியை கையால் உடைத்தார்.
- இதில், கண்ணாடி உடைந்ததுடன் இளைஞரின் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது.
- தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், நாகர்கோவிலில் உள்ள தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வருவதும் தெரியவந்தது.
- மேலும், காதலி பேசாத ஆத்திரத்தில் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக, கூறினார்.
- இது தொடர்பாக, போக்குவரத்து கழகம் அளித்த புகாரின் கீழ், கோட்டாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.