ஊட்டியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சலால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அடிக்கடி ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் மூடுபனி மற்றும் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சளி, காய்ச்சல், கை,கால் வலி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பருவநிலை மாற்றத்தால் ஃப்லு போன்ற புதிய காய்ச்சல் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.