சீரியல் மேக்கப் ஆர்டிஸ்ட் வீட்டில் மர்ம மரணம்...கொலையா..? தற்கொலையா..? தொடரும் மர்மம்...
திருவையாறு , லாரன்ஸ்
தஞ்சை , மனக்கரம்பை
சீரியல் மேக்கப் ஆர்டிஸ்ட் வீட்டில் மர்ம மரணம்...
கொலையா..? தற்கொலையா..? தொடரும் மர்மம்...
சந்தேகத்தால் காதலனோடு தொடர்ந்த தகராறு..?
வீட்டில் கழுத்தறுத்து இறந்து கிடந்த காதலி...
சீரியல்ல மேக்கப் ஆர்டிஸ்டா வேலை செஞ்சுட்டு வந்த பெண்... ரத்தகாயங்களோட வீட்டுல சடலமா கிடந்துருக்காங்க... நடந்தது தற்கொலையா இல்ல கொலையா?
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்துள்ளது மனக்கரம்பை கிராமம்…
ஆள் நடமாட்டமின்றி முட்புதர்கள் நிறைந்த பகுதியை அன்று காவல்துறை சூழ்ந்திருந்தனர்.
பகுதிவாசிகள் அனைவரும் அங்கிருந்த நீல நிற வீட்டின் முன் பதட்டத்தோடு கூடியிருந்தனர்.
கையில் கத்தி, கழுத்தில் காயம், தரையில் குளம்போல் ரத்தம் உரைந்துகிடக்க இளம் பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார்.
நடந்தது கொலையா அல்லது தற்கொலையா? யார் இந்த பெண் ? போன்ற கேள்விகளோடு விசாரணையை தொடங்கினார்கள்…
சடலமாக கிடப்பவர் அபிராமி. 23 வயதாகிறது. மனக்கரம்பை பகுதியில் வசித்து வந்துள்ளார். அபிராமியின் தந்தை பதினைந்து வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டதால் தாய் மற்றும் மூத்த சகோதரியுடன் தனியே வசித்து வந்திருக்கிறார் அபிராமி.
அழகுகலை படித்திருக்கும் அபிராமி சுப நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் ஒப்பனை கலைஞராக வேலைப்பார்த்து வந்துள்ளார். குடும்பச்சூழல் காரணமாக தாய் மகள் உள்பட மூன்று பேரும் தனித்தனியே வேலைப்பார்த்து வந்திருக்கிறார்கள். அதில் அபிராமி தன்னுடைய அக்காவுடன் சென்னையில் தங்கி மேக்கப் ஆர்டிஸ்டாக வேலைப்பார்த்து வந்துள்ளார்…
இந்தசூழலில்தான் சம்பவத்தன்று காலை சென்னையிலிருந்து வீடு திரும்பியிருக்கிறார் அபிராமி…
அவரது அம்மா வேலைக்கு சென்றுவிடவே, அபிராமி மட்டும் வீட்டில் தனிமையில் இருந்திருக்கிறார்.
வேலைக்கு சென்ற சில மணி நேரங்களிலேயே அபிராமியின் தாய்க்கு ஓர் செல்போன் அழைப்பு வந்திருக்கிறது.
அபிராமி வீட்டில் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடப்பதாக பக்கத்து வீட்டார் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
இதை கேட்டு பதறிப்போன அபிராமியின் தாய் காவல்துறைக்கு தகவல்கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்திருக்கிறார்…
கையில் கத்தி, கால் பக்கத்தில் ஊரிலிருந்து எடுத்துவந்த பேக்குடன் அபிராமி மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் அபிராமியின் அம்மாவிடம் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். அப்போதுதான் அந்த பகீர் தகவல் வெளி வந்திருக்கிறது.
அபிராமி உள்ளூரிலேயே இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பள்ளியில் தொடங்கிய இவர்களது காதல் கல்லூரி முடிந்தும் தொடர்ந்திருக்கிறது. ஆனால், காதலர்களிடையே ஏற்பட்ட சிறுசிறு பிரச்சனை நாளடைவில் மோதலாக மாறியிருக்கிறது.
அபிராமி அடிக்கடி மேக்கப் விஷயமாக வெளியூருக்கு செல்வது காதலி மீது அபிராமியின் காதலனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திருக்கிறது. இதனால் காதலன் அபிராமியை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தசூழலில்தான் இறப்பதற்கு முன்பு மனவுளைச்சலில் தான் தற்கொலை செய்துகொள்ளபோவதாக அபிராமி செல்போனிலிருந்து அவரது மூத்த சகோதரிக்கு குறுஞ்செய்தி சென்றிருக்கிறது. அவர் தன்னுடைய தாய்க்கு தகவல்கொடுத்து வீட்டிற்கு சென்று அபிராமியை காப்பாற்ற சொல்லியிருக்கிறார். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
அபிராமியின் காதலன் வீடு புகுந்து கொலையை செய்தாரா? அல்லது மனவுளைச்சலில் அபிராமியே தற்கொலை செய்துகொண்டாரா போன்ற கேள்விகளுக்கான விடை முழுமையான விசாரணைக்கு பிறகே வெளிச்சத்திற்கு வரும்…