மைசூர் தசரா திருவிழா - 750 கிலோ தங்க அம்பாரி மீது வீற்றிருந்த சாமுண்டீஸ்வரி
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவின் நிறைவு நாளில், சாமுண்டீஸ்வரி அம்மன் யானை மீது வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. கர்நாடக மாநிலம் மைசூருவில் உலக புகழ்பெற்ற தசரா திருவிழா நடைபெற்று வந்தது. மைசூர் தசரா விழாவின் நிறைவு நாளில், சாமுண்டீஸ்வரி அம்மன் யானை மீது வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. அலங்கார யானை சுமந்து வந்த 750 கிலோ தங்க அம்பாரி மீது வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரிக்கு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மலர் தூவி வழிபாடு செய்தார். மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய மைசூரில் பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள் ஊர்வலம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் மைசூர் தசரா திருவிழாவை கண்டு களித்தனர்.