"தமிழக ஆளுநர் ஒரு சார்பாக செயல்படுகிறார்" - இ.கம்யூ.மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு
நெல்லை கொக்கிர குளத்தில் ஏ ஐ டி யு சி யின் 20 வது மாநில மாநாடு கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டில், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி 60 - க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு சார்பாக செயல்பட்டு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருவதாக புகார் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்துள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புகார் கூறியுள்ளார்.