"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..!" முருகனைக் காண ஓடோடி வரும் பக்தர்கள்

முருகன் கோயிலில் அதிகாலை முதல் தற்போது வரை ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்.

Update: 2022-07-23 07:16 GMT

பழனி முருகன் கோயிலில் அதிகாலை முதல் தற்போது வரை ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் முருகன் கோயிலில் அதிகாலை முதல் தற்போது வரை ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்முருகன் கோயிலில் அதிகாலை முதல் தற்போது வரை ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்முருகன் கோயிலில் அதிகாலை முதல் தற்போது வரை ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். பழனி அடிவாரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்துள்ள நிலையில், ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நற்குன்று மலையில் உள்ள பால தண்டாயுதபாணி முருகன் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்து முருகனை வழிபட்டனர். முருகப் பெருமான் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் முருகனுக்கு பச்சைக்கல் பதித்த வைர மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மலர் காவடி, மயில் காவடி எடுத்து வந்த பக்தட்கள் அலகு குத்தி பக்திப் பரவசத்துடன் முருகனை வழிபட்டனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரளாக குவிந்த பக்தர்கள்

நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசைகளில் காத்திருந்து முருகனை தரிசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்