நகராட்சி அலுவலகத்தில் பாய், தலையணையுடன் படுத்து உறங்கி திமுக, அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகர்மன்ற தலைவருக்கு எதிராக திமுக, அதிமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அப்போது, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அடிப்படை வசதிகள் சரிவர நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டி, திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட 12 நகர்மன்ற உறுப்பினர்கள், பாய், தலையணையுடன் நகராட்சி அலுவலகத்தில் படுத்து உறங்கி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது