கொலையான விஏஓ குடும்பத்தினரிடம் ரூ.1 கோடியை வழங்கினார் கனிமொழி எம்.பி.

Update: 2023-05-01 09:04 GMT

தூத்துக்குடி அருகே வெட்டிகொலை செய்யப்பட்ட முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த 1 கோடி ரூபாய் நிதியுதவிக்கான காசோலையை திமுக எம்.பி. கனிமொழி , அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி லூர்து பிரான்சிஸ் கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். தூத்துக்குடி அருகே மணல் கொள்ளைய தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் கனிமொழி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்