நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது.
ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக 10:40 மணிக்கு குன்னூர் வந்து சேர்ந்தது.
குன்னூரிலிருந்து ஊட்டிக்கு காலை 11 மணிக்கு, ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.