பணியில் இருந்து ஓய்வு பெறும் தாய்.. அதிர்ச்சி பரிசு அளித்த மகன்..! நெகிழ்ச்சி சம்பவம்..!
ராஜஸ்தானில் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெறும் தாயை, அவரது மகன் ஹெலிகாப்டரில் அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த யோகேஷ் சவுகான் என்பவரின் தாய் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். தாய் மீதும், அவரின் பணி மீதும் அதீத அன்பு கொண்ட யோகேஷ் சவுகான், பணி ஓய்வு பெறும் தாய்க்கு அதிர்ச்சி பரிசு அளித்து நெகிழ வைத்துள்ளார். வாடகை ஹெலிகாப்டரில் தாயை அழைத்து சென்று, அவரின் ஆசிரியர் பணியை கவுரவித்துள்ளார்.