துபாயில் தொலைந்த தாய்..!! சமையல் வேலைக்காக சென்ற.. தாயின் நிலை தெரியாமல் தவிக்கும் மகள்கள்
துபாய் சென்ற தாயை மீட்டுத் தருமாறு, அவரது மகள்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். குன்னூர் சந்திரா காலணி பகுதியை சேர்ந்த அந்தோனியம்மாள், சமையல் வேலைக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு துபாய் சென்றுள்ளார். பின்னர் கடைசியாக கடந்தாண்டு மார்ச் மாதம், குடும்பத்தினருடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அதன்பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அந்தோனியம்மாளின் நிலை குறித்து தெரியாமல் தவித்து வரும் அவரது இரு மகள்களும், தங்களது தாயை மீட்டுத் தர வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.