மகளின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியார் செய்த செயல்... ராசிபுரம் அருகே நடந்த பயங்கரம்!

Update: 2022-09-17 10:28 GMT

மகளின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியார் செய்த செயல்... ராசிபுரம் அருகே நடந்த பயங்கரம்!

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சர்க்கார் தோப்பு பகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

இதுகுறித்து அறிந்த ஜோதிலட்சுமியின் கணவர் அருள்மணி, ஜோதிலட்சுமியை கண்டிக்கவே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் ஜோதிலட்சுமி தாய் வீட்டுக்கு சென்றுவிட, அருள்மணி அங்கேயும் அடிக்கடி சென்று தகராறு செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் ஜோதிலட்சுமியின் தாய் ஜானகி, மகளின் முறையற்ற உறவுக்கு தடையாக மருமகனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி மணிகண்டனும், அவரது நண்பர் லோகேஸ்வரனும், மது போதையில் இருந்த அருள்மணியை ஏரிக்கு கூட்டி சென்று, அவரது தலையில் கற்கள் மற்றும் மது பாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அருள்மணி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மணிகண்டன், லோகேஸ்வரன், ஜானகி ஆகியோரை கைது செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்