Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-03-2023) | Morning Headlines | Thanthi TV
ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர்...4 மாத காலம் வைத்திருந்து மசோதாவை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ....
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் ரவி அதிரடி...ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வருவதாக கூறி மசோதாவை திருப்பி அனுப்பியதாக தகவல்...
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்....ஆளுநரின் செயல்பாடு, தமிழக பட்ஜெட், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை....
ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை, சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றினால், ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்..அதுதான் சட்டம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி...
ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை, பொதுவெளியில் அரசு வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்..மசோதாவில் குளறுபடி இருப்பதாலேயே அதனை ஆளுநர் திருப்பி அனுப்பியதாக பேச்சு...