Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-12-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-12-06 00:58 GMT

வரும் 7,8,9-ஆம் தேதிகளில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி...காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெறும் என, வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்...

"கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்..."மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கு மூலம் எச்சரிக்கை...

ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்துவது, ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த பெருமை...ஜி 20 மாநாடு நடத்துவது குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு...

2023-ம் ஆண்டுக்கான ஜி 20 நாடுகளின் தலைமையை ஏற்ற இந்தியா...பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு...

ஜி-20 நிகழ்வுகளுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் தமிழ்நாடு வழங்கும்...ஜி 20 தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

உலகத் தலைவர்களுடன், பிரதமர் மோடி நல்லுறவை பேணியதால் ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றது இந்தியா...வேறு எவராலும், இது சாத்தியமானது இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்...

Tags:    

மேலும் செய்திகள்