135 பேரை காவு வாங்கிய குஜராத் மோர்பி பாலம் "விபத்துக்கு முன்னே கம்பிகள் அறுந்ததா..?" விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

Update: 2023-02-21 07:59 GMT
  • குஜராத் மாநிலம் மோர்பியில் கடந்த அக்டோபர் மாதம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் விழுந்து, 135-க்கும் மேற்ட்டோர் உயிரிழந்தனர்.
  • நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பாலத்தில் சீரமைக்கும் பணியை மேற்கொண்ட ஒரேவா குழும நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
  • விபத்து தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.
  • அதில் தொங்கு பாலத்தை தாங்கி நின்ற 49 கம்பிகளில் 22 கம்பிகள், விபத்து நேரிடுவதற்கு முன்பாகவே உடைந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறாமல் ஒரேவா குழுமத்திற்கு பாலத்தை சீரமைக்கும் ஒப்பந்தம் வழங்கியது தவறு எனவும் நகராட்சி தரப்பிலும், ஒப்பந்தத்தாரர் தரப்பிலும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனக்குறைவு இருந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பாலம் திறப்பு, கட்டணம் உயர்வு, ஒரே நேரத்தில் எத்தனை பேர் பாலத்தில் செல்லலாம் என்பதில் எந்தஒரு கட்டுப்பாடும், நகராட்சியின் அனுமதியின்றி ஒரேவா குழுமம் செயல்பட்டுள்ளது என சிறப்பு விசாரணை குழு குற்றம் சாட்டியிருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்