அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் தமக்கு வரவேற்பு அளிக்கும் கட்சி தொண்டர்கள் ஆடம்பரத்தைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அன்பை வெளிப்படுத்தும் வகையில் தம்மை வரவேற்று ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது, பட்டாசு வெடிப்பது, வெள்ளிச் செங்கோல்-வாள் போன்றவற்றை நினைவுப் பரிசாக வழங்குவது, மாலை அணிவிப்பது, பொன்னாடை போர்த்துவது போன்றவற்றை தவிர்க்கும்படி தெரிவித்துள்ளார்.
பயனற்ற ஆடம்பரங்களை தவிர்த்து, தேவையானோருக்கு உதவிடும் வகையில் புத்தகங்களையும், அறக்கட்டளைக்கான நிதியுதவியையும், மகளிர் சுய உதவிக் குழு தயாரிப்புகளையும் மட்டுமே அன்பளிப்பாக வழங்கிடுங்கள் என்றும் அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.