"மின் கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்?"... மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Update: 2023-03-28 02:47 GMT
  • சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 26 ஆயிரம் கோடி ரூபாய் மின்சார வாரியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், எதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என கேள்வி எழுப்பினார்.
  • இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் தொடர்ந்து, அழுத்தம் அளித்ததால் தான், மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக தெரிவித்தார்.
  • இதைத்தொடர்ந்து பேசிய தங்கமணி, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்காதது ஏன் என்றும் வினா எழுப்பினார்.
  • அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக அரசாணை தான் போட்டது என்றும், தற்போது அதற்கான கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம் என்றார்.
  • விரைவில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என பதில் அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்