அமைச்சர் கே.என்.நேருவின் பிறந்தநாளையொட்டி, ஜில்லா பட போஸ்டர் ஸ்டைலில் திமுகவினர் வாழ்த்து பேனர்களை திருச்சி மாநகரில் வைத்துள்ளனர். ஜில்லா படத்தில் விஜய்யும், மோகன்லாலும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு செல்வது போன்று, அமைச்சர் கே.என்.நேருவையும் அவரது மகன் அருணையும் இணைத்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் திமுகவினர் பரப்பி வருகின்றனர்.