சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த பள்ளி மாணவன்... ரூ.1 லட்சம் சொந்த நிதியை நிவாரணமாக வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சக மாணவர்கள் தாக்கியதில், மவுலீஸ்வரன் என்ற 10-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான். இந்த சம்பவத்தில் 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் வீட்டிற்கு சென்று, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல் தெரிவித்தார். தனது சொந்த நிதியாக ஒரு லட்ச ரூபாய் வழங்கிய அவர், மீதமுள்ள 2 மகன்களையும் படிக்க வைக்க, தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்