பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி சுற்றுலா - நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் துபாய் அபுதாபி போன்ற நாடுகளுக்கு மாணவர்களை கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அடுத்த கட்டமாக கட்டுரை போட்டியின் வாயிலாக சிறந்த 250 மாணவர்களை வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல திட்டம் உள்ளது என்றார்.