சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த 10ஆம் வகுப்பு மாணவர்... இரங்கல் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்திற்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் 10ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், மாணவர் உயிரிழந்த செய்தியறிந்து மனவருத்தமும், வேதனையும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார். மாணவனை இழந்துவாடும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.