நடுவானில் பறக்கும்போது வந்த உத்தரவு...உடனே நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் - இந்தியாவில் இப்படியொரு சம்பவமா?
நடுவானில் பறக்கும்போது வந்த உத்தரவு...உடனே நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் - இந்தியாவில் இப்படியொரு சம்பவமா?
கோ பஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்றும் நாளையும் அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது . நிதி நெருக்கடியால் திவால் நிலைக்கு ஆளான அந்நிறுவனத்தின் இந்த திடீர் நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு விமான போக்குவரத்து ஒழங்குமுறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெட்ரோலியம் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு கோ பஸ்ட் நிறுவனம் பெருமளவில் நிலுவை தொகையை செலுத்த வேண்டியுள்ளதால் அதன் சேவை இனி தொருமா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீ நகரிலிருந்து மும்பை மற்றும் டெல்லியிலிருந்து மும்பை சென்ற விமானங்கள் சூரத்தில் நேற்று திடீரென தரையியிரக்கப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.