பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால், நேற்று ஒரே நாளில் 25 சிறுவர்கள் உட்பட 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் சிந்து, பலுசிஸ்தான் உள்ளிட்ட மாகானங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
சிந்து மாகானத்தில், பொதுமக்கள் படகுகள் மூலமே வெளியேற வேண்டியுள்ளது.
அதே நேரத்தில், படகில் செல்ல ஒரு நபருக்கு 200 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதால் செய்வதறியாது மக்கள் தவித்து வருகின்றனர்.
இதனிடையே, வெள்ளத்தால் நேற்று ஒரே நாளில் 25 சிறுவர்கள் உட்பட 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை அந்நாட்டில் 441 சிறுவர்கள் உட்பட ஆயிரத்து 265 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது