"மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்கள்" | முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அவரை மாற்றுத்திறனாளி மாணவர்கள் நடனமாடி வரவேற்றனர். விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நாட்டிலேயே மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்துவது தமிழகம் தான் கூறினார். மேலும், நல்ல தரமான கல்வி அளிப்பது மட்டுமல்லாமல் பொறுப்புள்ள குடிமக்களாகவும் ஆக்கக்கூடிய வகையிலே சிறப்பான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் மேம்பாட்டிற்கான கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு சமநிலை சமவாய்ப்பு என்னும் சமூக நீதியை நிலைநாட்டிட தமிழக அரசு முழுமூச்சுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். விழாவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வியை வழங்க டிஜிட்டல் மறுவாழ்வு தளமான "ENABLING INCLUSION" வழியாக அனைவரையும் உள்ளடக்கிய கல்விக்கான மாநில திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பிக் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் கலந்து கொண்டனர்.