நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்...மாணவர்கள் உயிரை பறித்த சுற்றுலா பயணம் - அரசு அதிரடி உத்தரவு

Update: 2022-12-22 05:10 GMT

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கல்வி சுற்றுலாவுக்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், 9 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலம் தோபால் மாவட்டத்தில் இருந்து நோனி மாவட்டத்தில் உள்ள கோபும் நகருக்கு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டு பேருந்துகளில் கல்வி சுற்றுலாவுக்கு சென்றனர். நோனி மாவட்டம் லாங்சோய் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஒரு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 9 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பைரன் சிங் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்