தொடர் கனமழையால் மூழ்கிய தரைப்பாலம்... உயிரை கையில் பிடித்து ஆற்றை கடந்து செல்லும் மக்கள்..!

Update: 2022-12-10 10:23 GMT

பொதுமக்கள் கயிறைப் பிடித்துக் கொண்டு அக்கறைக்கு செல்லும் நிலை ஏற்பட்ட்டுள்ளது.10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அளத்துறை கிராமத்தில் தரைப்பாலம் முற்றிலும் மூழ்கியதால் பொதுமக்கள் கயிறைப் பிடித்துக் கொண்டு அக்கறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வந்தவாசி அடுத்த அலத்துறை கிராமத்தில் இருந்து பையூர், சௌந்தரிபுரம், மேல்நர்மா பின்னத்தூர்,எலப்பாக்கம், துறையூர், கல்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் இந்த சாலையின் வழியில் தரைப்பாலம் ஒன்று உள்ளது தற்போது மேண்டஸ் புயல் காரணமாக கன மழை பெய்தது. இந்த நிலையில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான அளத்துறை ஏரி நிரம்பி கலங்கள் வழியாக உபரி நீர் வேகமாக வெளியே செல்லும்போது இந்த தரைப்பாலம் முழுவதும் மூழ்கி உள்ள நிலையில் கிராம பொதுமக்கள் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அக்கறைக்கு உயிரை பணயம் வைத்து கயிறு மூலமாக தரை பாலத்தை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் 10 க்கு மேற்பட்ட கிராம பொதுமக்கள் வந்தவாசி உத்திரமேரூர், காஞ்சிபுரம் போன்ற பெரிய நகரத்திற்கு அவசர வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் சூழ்நிலை தற்போது இருந்து வருகிறது. மேலும் குழந்தைகளும் பெரியவர்களும் கயிற்றின் மூலமாக தற்போது இக்கரையில் இருந்து அக்கரைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த தரைப்பாலத்தின் வழியாக சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் கைற்றின் வழியாக செல்லும்போது பல உயிர் சேதம் ஏற்படும் அபாயத்தில் இருந்து வரும் நிலையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்