"இதுக்கு நான் ட்ரெயின்லே வந்து இருப்பேன்..தப்பிச்சு வந்த மாதிரி இருக்கு.."கொந்தளித்த மதுரை விமான பயணிகள்...!
மும்பை - மதுரை விமானம் 12 மணி நேரம் தாமதமானதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். மும்பையில் இருந்து மதுரைக்கு காலை 9 மணிக்கு புறப்பட வேண்டிய ஸ்பை ஜெய் விமானம், 12 மணி நேரம் தாமதாக புறப்பட்டது. இதன் காரணமாக, கடும் அவதியடைந்த பயணிகள், மும்பை விமான நிலையத்தில் 12 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து, தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், வெளிநாட்டில் இருந்து தப்பித்து வந்தது போல் இருப்பதாக, மதுரை வந்த பயணிகள் கூறினர்.