காதலிக்க மறுத்த நர்சிங் மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞருக்கு மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் மீனா. இவருக்கு ஈஸ்வரன் என்ற மகளும், ஒரு மகளும் உள்ளனர். மீனாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்த நிலையில் மீனாவின் மகளை, உறவினர் ஒருவர் பராமரித்து வளர்த்து வந்தார். அதே வீட்டில் ரேவதி என்ற இளம் பெண் தங்கியிருந்து நர்சிங் படித்து வந்தார். அந்த வீட்டிற்கு தனது தாயார் மீனாவுடன் அடிக்கடி சென்று வந்த ஈஸ்வரன், ரேவதியை ஒரு தலையாக காதலித்துள்ளார். ரேவதி, தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரன் கடந்த 2005 ஆம் ஆண்டு ரேவதியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது குறித்த வழக்கு மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில், நீதிபதி கிருபாகரன் மதுரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவியை கொலை செய்த ஈஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.