அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2023-07-18 13:27 GMT

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை நீதிமன்றம் விசாரித்த போது, மனுதாரர் குறிப்பிட்ட நிலம், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது என கூறிய இந்து சமய அறநிலையத் துறை, பட்டா வழங்க மறுப்பு தெரிவித்தது. மேலும், கோயில் நிலத்தை அபகரிக்கும் நோக்கில், வழக்கு தொடுக்கப்பட்டதாக அறநிலையத்துறை கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இதனிடையே, தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்கள், அறங்காவலர்களால் சட்டவிரோதமாக விற்கப்பட்ட சொத்துக்கள் குறித்து அறநிலையத்துறை விசாரணை நடத்தி, கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்