காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி - இறுதியில் நடந்த ட்விஸ்ட்

Update: 2022-06-25 23:34 GMT

தர்மபுரி காரிமங்கலம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கோரி காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். தர்மபுரி காரிமங்கலம் அருகே கெரகோடஹள்ளி கிராமத்தை சேர்ந்த பாஷா என்பவரும் அதேப்பகுதியைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணும் காதலித்து வந்தநிலையில், இருவரும் வெவ்வேறு வேறு சமூகம் என்பதால் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, திருமணம் செய்து கொண்டு காரிமங்கலம் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமரச முயற்சியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால், இருவரையும் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்