ரத்த கரையில் காதலனின் ஆடைகள் - தந்தை செய்த பகீர் காரியம் - முடிவுக்கு வந்த 4 வருட காதல்

Update: 2023-07-21 09:21 GMT

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே, இளம்பெண் கொலை வழக்கில் காதலன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவையாறு அடுத்துள்ள மனக்கரம்பையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகள் அபிராமி, வீட்டில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மனத்திடல் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் முகேஷ், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரிடம் சரணடைந்த பின்னர், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். முகேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், அபிராமியை 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறியுள்ளார். இருவரும் சென்னையில் இருந்து மனக்கரம்பைக்கு வந்தபோது, திருமணம் செய்துகொள்ள அபிராமி மறுத்ததால் வாக்குவாதம் முற்றி, கத்தியால் குத்திக்கொன்றதாக தெரிவித்துள்ளார். தனது ரத்தக்கறையுள்ள ஆடைகளை தந்தையிடம் கொடுத்ததாகவும், அவருடன் இருந்த மகேந்திரன், அந்த சட்டையை கொள்ளிடம் ஆற்றில் வீசியதாகவும் கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முகேஷ், ராமலிங்கம், மகேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்