நண்பர்கள், மனைவியை Intro கொடுத்தால் உஷார்.. எதுவும் இல்லாமல் மொத்தமும் உருவப்படும் - மதுரையில் விசித்திர சம்பவம்

Update: 2023-02-10 03:00 GMT

மதுரையில், நண்பர்களை ஏமாற்றி, 30 லட்சம் ரூபாய் கடன் பெற்று, தலைமறைவான இளம் தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், தான் பணியாற்றிய செல்போன் கடையில், தனது மனைவி யுவலெட்சுமியை, நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அப்போது, பெற்றோரை மீறி சமீபத்தில் காதல் திருமணம் செய்ததால், பொருளாதார நெருக்கடியில் தவிப்பதாகவும், 5 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

அதனை நம்பிய ஶ்ரீராம் என்பவர், அவருடைய சான்றிதழை வைத்து, 3 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றுக் கொடுத்துள்ளார்.

பின்னர், அவரிடம் இருந்த ஒரு லட்சம் ரூபாயையும் கடனாக கொடுத்துள்ளார். ஶ்ரீராமிடம் வாங்கிய கடனுக்கு, 3 மாதங்கள் மட்டும் வட்டி செலுத்திய நிலையில், மனைவியுடன் சந்தோஷ் தலைமறைவாகியுள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஶ்ரீராம், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, இதே பாணியில், 8 பேரிடம் மேலும் 25 லட்சம் ரூபாய் கடன் பெற்று ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.

இதனிடையே, தலைமறைவான சந்தோஷ் - யுவலெட்சுமி தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்