47-வது சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் கொண்டாடும் வகையில், டெல்லி பிரகதி மைதானத்தில் சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், அடிமைத்தன காலத்தில் நமது கையெழுத்துப் பிரதிகள் மற்றும் நூலகங்கள் எரிக்கப்பட்டது இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகத்திற்கும், முழு மனித குலத்திற்கும் இழப்பு என குறிப்பிட்டார். வரலாற்றின் பல்வேறு அத்தியாயங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படுவதால், அவை தெளிவாகவும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவதாகத் தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத்தில் நமது பழங்குடி சமூகத்தின் பங்களிப்பு அழியாத வகையில் 10 சிறப்பு அருங்காட்சியகங்களை உருவாக்கி வருவதாக கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 240 பழங்கால கலைப்பொருட்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு இந்த எண்ணிக்கை 20ஐ கூட எட்டவில்லை என்றும், மறைமுகமாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.