"ராகுலுக்கு எதிரான தீர்ப்பு சொன்ன நீதிபதி நாக்கை அறுப்போம்"-காங்கிரஸ் நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு
காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு கூறிய நீதிபதியின் நாக்கை அறுப்போம் என காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, மற்றும் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கம் மாநகர் மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.