கணவனை தீயிட்டு கொன்றும் அடங்காத தீரா கள்ளக்காதல் ஆசை.. இறந்த கணவன் மீதே பழி போட்ட 'லட்சுமி' - மிரண்ட போலீஸ்

Update: 2023-05-20 07:32 GMT

ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில், கடந்த மார்ச் 19ஆம் தேதி, அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. அதாவது, உடல் எரிக்கப்பட்டு வனப்பகுதியில் கிடந்தவர் பென்னாகரத்தை சேர்ந்த பிரகாஷ் என்பதை போலீசார் கண்டறிந்தனர். யார் இந்த பிரகாஷ் என போலீசார் விசாரித்தபோது, ஏற்கனவே இவரை காணவில்லை என அவரது மனைவி லட்சுமி, காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது தெரியவந்தது.

கொலை எதற்காக நடந்தது? பிரகாஷின் எதிரிகள் யார்? என போலீசார் விசாரணை நடத்தியபோது, அப்படி யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் லட்சுமி, வேறொரு நபருடன் தகாத உறவில் இருந்து வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. லட்சுமியிடம் தகாத உறவில் இருந்த நபர், கொத்தகோட்டா கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் என்பதையும் போலீசார் உறுதிப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து லட்சுமியின் பக்கம் போலீசாரின் பார்வை சென்றது. லட்சுமியிடம் தங்களது பாணியில் விசாரணை நடத்தியபோது, போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திணறிய லட்சுமி, ஒரு கட்டத்தில் கணவரைக் கொன்றது, தான்தான் என ஒத்துக் கொண்டார்.

தனது கணவர் பிரகாஷ், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் விரக்தி அடைந்ததாகவும், கணவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டையால் அடித்துக் கொன்றதாகவும் லட்சுமி கூறியது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது. அப்படியானால், சின்னராஜிடம் இருந்த உறவு குறித்து போலீசார் கேட்டபோது, லட்சுமி மழுப்பியதாக கூறப்படுகிறது.

கொலையை மறைப்பதற்காக, பிரகாஷின் உடலை லட்சுமியும் அவரது கள்ளக்காதலனுமான சின்னராஜ் என்பவரும், டாட்டா ஏஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். பென்னாகரத்தில் இருந்து ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து, இருவரும் சேர்ந்து பிரகாஷின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதும் விசாரணையில் அம்பலமானது.

இந்த கொலை வழக்கில் லட்சுமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சின்னராஜ் ஆகிய இருவரையும் உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்ததுடன், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தகாத உறவில் இருப்பதற்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி, தனது கணவன் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் கொலை செய்ததாக கூறியது, போலீசாரிடையே திகைப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்