காதலனுடன் நிச்சயம்... 8 மாதம் பொறுத்து பார்த்த இளம்பெண் - திடீரென வீட்டில் தற்கொலை...

Update: 2023-02-05 02:14 GMT

திருவள்ளூர் அருகே காதலனுடன் நிச்சயம் ஆகி 8 மாதங்கள் கடந்தும் திருமணம் ஆகாத விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான கனகப்பிரியா.

தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த இவர், திடீரென தன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

விசாரணையில் இவர் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்த சூழலில் அவர்களுக்கு 8 மாதங்களுக்கு முன்பாக நிச்சயம் நடந்ததும் இதுவரை திருமணம் நடக்காமல் இருந்த விரக்தியே தற்கொலைக்கு காரணம் என தெரியவந்தது.

வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்