திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இடைநீக்கம் செய்யப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவரையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் இணைத்து ராதாகிருஷ்ணன் கருத்து பதிவிட்டதாகவும், பின்னர் அந்தப் பதிவு அழிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் அது போன்ற கருத்துக்களை பகிர்ந்ததே இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு காரணம் என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.